"டெல்லி வன்முறை சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் தான் பொறுப்பு" - சோனியா காந்தி

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
x
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி கலவரம் கவலை அளிப்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகவும் கூறினார். டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில், ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறினார். மேலும் கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரே காரணம் என்றும்,  எனவே அமித்ஷா பதவி விலக வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்