ஆம் ஆத்மி கட்சி, 56 தொகுதிகளில் முன்னிலை - வெற்றி கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி, 56 தொகுதிகளில் முன்னிலை - வெற்றி கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள்
x
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பகல் 12 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி முன்னிலை பிடித்து வரும் நிலையில், 3 வது முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்