"டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்" - கபில் மிஷ்ரா கருத்து

டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான கபில் மிஷ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் - கபில் மிஷ்ரா கருத்து
x
டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான கபில் மிஷ்ரா கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தனது  கருத்தை பதிவு செய்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அவர், பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்பும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து  அச்சப்பட தேவையில்லை என்று கூறியிருந்தார்.தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கபில்  மிஷ்ரா இந்த கருத்துகளை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்