"பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதாகவும், ஆனால் மத்திய பாஜக அரசு தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதாரம் மோசமாக உள்ளதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் -  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தில் பேசிய அவர், பண மதிப்பிழப்பு  கொண்டு வந்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்றார். ஆனால் அரசு தமது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும், ப.சிதம்பரம் புகார் தெரிவித்தார். பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை கூட  அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ப.சிதம்பரம் கூறினார். கடந்த 1991, 2008, 2013 - ஆம் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதாகவும் அதனை, காங்கிரஸ் அரசு சிறப்பாக சமாளித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போதைய பொருளாதார மேலாளர்கள், தொடர்ந்து முந்தைய அரசை குறை கூறி  வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்