"ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிப்பு" - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிப்பு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால்,  இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர், இது தொடர்பாக கேர் என்ற நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தர குறியீட்டின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு காப்பர் உற்பத்தி குறைந்துள்ளதா கூறியுள்ளார். இதனால், காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும் ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன், காப்பர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக ஸ்டெர்லைட் இருந்ததாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்