"50 ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை பிரச்சினை உள்ளது" - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எதையும் பார்த்துக்கொண்டிருக்காமல், முடிவெடுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை பிரச்சினை உள்ளது - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
x
டெல்லியில் பேசிய அவர், இந்திய - சீன உறவில் இருநாட்டு தலைவர்களின் புரிதல் அவசியம் என்றும், சீனாவுடன் நல்ல புரிதலில் இந்தியா உள்ளதாகவும் தெரிவித்தார். 50ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை பிரச்சினை ஆரம்பமானதாக கூறிய ஜெய்சங்கர், சட்டப்பிரிவு 370, அயோத்தி வழக்கு ஆகியவற்றுக்கு மத்திய பாஜக அரசு முடிவு கண்டிருப்பதாக கூறினார். முந்தைய அரசை விட வேகமாக செயல்படுவதாக அவர் தெரிவித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தான் படிக்கும் போது,  குழுக்களை பார்த்ததில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பதான்கோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் யார் என்பதை உணர்த்திவிட்டதாக கூறிய அவர், தீவிரவாதம் துளிர்விட ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்