குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் : பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக ஆலோசனை கூட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் : பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
x
பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி  செயல் தலைவர் ஜேபி நட்டா தலைமையில்  நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் , அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விவாதிக்க  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று மாலை 4.30  மணிக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும்  ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்