தலைநகருக்கு நிலம் : "விவசாயிகளிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைப்போம்" - ஆந்திர அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி தகவல்

ஆந்திராவில் தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் நிலங்களை ஒப்படைப்போம் என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
தலைநகருக்கு நிலம் : விவசாயிகளிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைப்போம் - ஆந்திர அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி தகவல்
x
திருப்பதியில் செய்தியாளர்களை  சந்தித்த அவர், மாநிலம் சமவளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 3  தலைநகரங்களை அமைக்க விரும்புவதாகவும், அதற்கு மத்திய அரசின்  அனுமதியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அமராவதியிலேயே தலைநகர்  இருக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். தலைநகருக்கு அரசு கையகப்படுத்திய  நிலத்தை   விவசாயிகளுக்கே மீண்டும்  திருப்பி தருவோம் என்றும் அவர் கூறினார்.  தலைநகர் விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு  வட ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்திருப்பது சந்திரபாபு நாயுடுவை மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்