குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 2வது வாரத்திற்கு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்