"3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் தூங்குவதை பார்த்திருப்பீர்கள்"
x
அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு, திமுகவினர் இலவசமாக வழங்குவதாக கூறிய, 3 சென்ட் நிலம் எங்கே என கேட்குமாறு, வாக்காளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சி தேர்தலையொட்டி, பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிராசாரம் மேற்கொண்ட, அவர் இதனை தெரிவித்தார். மேலும், 2 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து திமுகவினர் அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், அங்கேசென்று தூங்கி கொண்டிருப்பதை மக்கள் காணுவதாகவும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்