பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 21 நாளில் தூக்கு - சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திராவில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 21 நாளில் தூக்கு - சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
x
ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கால்நடை பெண் மருத்துவரின் நினைவாக  இந்த மசோதாவுக்கு "ஏ.பி. திஷா ஆக்ட்" என பெயரிடப்பட்டுள்ளது. 

இதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக  ஒரே வாரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அடுத்த 2 வாரங்களில் வழக்கில் தண்டனை வழங்கப்படும். இதனால் பாலியல் வழக்குகளில் தற்போதுள்ள 4 மாத விசாரணை காலம்  21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்