"குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்தது" - பா.ஜ.க. எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரலாற்று சிறப்புமிக்க மசோதா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்தது - பா.ஜ.க. எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல்
x
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரலாற்று சிறப்புமிக்க மசோதா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில்  இன்று காலை பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அந்த மசோதா மீது உள்ள ஐயப்பாடுகளை களைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் மீது அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் கட்டுக்கதைகளை தகர்க்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் நலனுக்கான முயற்சியில் இந்த சட்டம் முக்கியமானது என பிரதமர் மோடி சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்