"பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம்" - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாராட்டு

பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம் என்று முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம் - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாராட்டு
x
தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகளில் கையெழுத்து அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதி அறிவித்துள்ளார். இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் ராமதாஸ் தவிர வேறு யாரும் இவ்வாறு பாராட்டி இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும், கனிவு பெருகட்டும் என்று ராமதாஸ் பாராட்டியிருப்பது ரசிக்கும் வகையில் இருந்ததாகவும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். ராமதாஸ் கட்சி நடத்தவில்லை, பல்கலைக்கழகத்தை தான் நடத்துகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.  மக்கள் பிரச்சினை எதுவென்றாலும் , உடனடியாக அது குறித்து பேசுவது ராமதாசும், அன்புமணியும் தான் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்