உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரேவிற்கு,பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரேவிற்கு,பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, விடா முயற்சியுடன் உத்தவ் செயல்படுவார் என நம்புகிறேன் என்று, குறிப்பிட்டுள்ளார். இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், உத்தவ் தாக்கரேக்கு வாழ்த்து தெரிவித்து, கடிதம் எழுதி உள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் உத்தவ்தாக்கரே, சரத்பவார்,பாலாசாஹேப் தோரட் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநில வளர்ச்சிக்கு தேவையான நிலையான அரசை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். 

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார், உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கள் தலைமையின் கீழ் மகாராஷ்டிரா வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குடும்பத்தோடு தரிசனம் - சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு

முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ரஷ்மி மற்றும் மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோருடன் மும்பை சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

சிவசேனா தொண்டர்கள் கொண்டாட்டம் - பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை வரவேற்று, மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஜம்முவில், சிவசேனா தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்