"165 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கூட்டணியில் உள்ளனர்" - சஞ்சய் ராவத்

பா.ஜ.க. வின் கனவு பலிக்காது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
165 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கூட்டணியில் உள்ளனர் - சஞ்சய் ராவத்
x
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தவறான முறையில் ஆட்சி அமைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கு பதினொன்றரை மணிக்கு விசாரணைக்கு வருகிறது.பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும், சிவசேனா சார்பில் கபில் சிபலும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்க்வியும் வாதாட உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அஜித் பவாரும், தேவேந்திர பட்னாவிசும் தவறான முடிவை எடுத்துவிட்டதாக கூறினார். வரலாற்றில் இதுபோன்று நடந்ததில்லை என்றும், இனி, நடக்கக்கூடாது என்றும் தெரிவித்த அவர், தங்கள் கூட்டணியில் 165 எம்.எல்.ஏ.க்கள் உள்ளபோது, பாஜகவை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைத்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்