நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் : கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய தா.பாண்டியன்

நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் : கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய தா.பாண்டியன்
x
நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டு  கொடி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்றார்.  தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும், மக்கள் பா.ஜ.க. நடவடிக்கையை நன்கு புரிந்து கொண்டு இருப்பதாகவும் தா.பாண்டியன்   தெரிவித்தார். பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடியும், எப்போதும் நிரந்தரமான பதவிகளில் தாங்கள் உள்ளதாக நினைத்து கொண்டு இருப்பதாகவும் தா.பாண்டியன் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்