"வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்" - மு.க ஸ்டாலின்
வைதீக முறைப்படி நடக்கும் திருமணத்தை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வைதீக முறைப்படி நடக்கும் திருமணத்தை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில், மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வாரிசு அரசியலை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின், வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும், கூறினார். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி திமுக இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள் எனவும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.
Next Story