மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு - எதிரணியுடன் கைகோர்க்குமா சிவசேனா?

மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் கைகோர்க்க சிவசேனா, ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளதால், மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு - எதிரணியுடன் கைகோர்க்குமா சிவசேனா?
x
மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் கைகோர்க்க சிவசேனா, ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளதால், மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா - 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் - 54, காங்கிரஸ் - 44 , இதர கட்சிகள் - 16, சுயேட்சைகள் - 13 பேர் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணிக்கு 161 பேர் பலம் உள்ளது. 

அதேநேரம், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இழுபறி நிலை நீடித்து வருகிறது . இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, ஆட்சி அமைக்க சிவசேனா முயலுவதாகவும், ரகசிய பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள், இறக்கை கட்டி பறக்கின்றன.

ஒருவேளை, பாஜகவுக்கு எதிராக சிவசேனா, எதிரணியுடன் கைகோர்த்தால், பலம் 154 ஆக உயரும். ஏனெனில் சிவசேனா - 56, தேசியவாத காங்கிரஸ் - 54, காங்கிரஸ் -44 எம் எல் ஏக்கள் இருப்பதால், ஆட்சிக்கு தேவையான 145  எம்எல்ஏக்களுக்கு பதில், கூடுதலாக 9 இடங்கள் கைவசம் இருக்கும். பரபரப்பான இந்த சூழலில், மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 8 ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பாக, புதிய ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. தற்போதைய சூழலை பார்க்கும் போது, மஹாராஷ்டிராவில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்