"தேர்தலில், 1+1 என்பது 11 ஆக இருக்கும்" - மோடியின் புதிய கணக்கு

நரேந்திராவும் தேவேந்திராவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், ஒன் பிளஸ் ஒன் என்பது 2 அல்ல - 11 ஆக இருக்குமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தலில், 1+1 என்பது 11 ஆக இருக்கும் - மோடியின் புதிய கணக்கு
x
நரேந்திராவும் தேவேந்திராவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், ஒன் பிளஸ் ஒன் என்பது 2 அல்ல - 11 ஆக இருக்குமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் பன்வேல் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, அவர் இந்த புதிய கணக்கை வெளியிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரா மற்றும் மாநில முதல்வர் தேவேந்திரா ஆகியோரின் பார்முலா சூப்பர்ஹிட் என குறிப்பிட்ட அவர், தேர்தலில் வெற்றி கொடுத்தால், மஹாராஷ்டிராவின் வளர்ச்சி, புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதிய இந்தியாவை உருவாக்க, மத்தியில் ஆளும் பாஜக அரசு பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்