சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
17 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரசுடன் இருந்து தமிழ்நாட்டின் உரிமை பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் திமுகவினர் கொண்டு வந்ததாக அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். புலியூர்குறிச்சி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர், பெண்களுடன் அமர்ந்து அ.தி.மு.க. வின் சாதனையை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழக உரிமையை பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்றார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து, சீமான் வெளியிட்ட கருத்து, விஷமத்தனமானது என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் டி. ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்