இந்தியா-சீனா நல்லுறவு ராஜீவ் காந்தி காலத்திலேயே தொடங்கியது - காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கருத்து
இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு ராஜீவ் காந்தி காலத்திலேயே தொடங்கியதாக காங்கிரஸ் கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது
இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு ராஜீவ் காந்தி காலத்திலேயே தொடங்கியதாக காங்கிரஸ் கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா சீனாவுடன் தொடர்ந்து அர்த்தமுள்ள உறவுகளை இந்தியா பராமரித்து வருவதாக கூறினார். இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் சீன பயணத்தில் இருந்தே தொடங்கியது என்றும் கூறினார். அப்போதைய சீன அதிபருடன் ராஜீவ்காந்தி நடத்திய பேச்சுவார்த்தை, பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுத்து சென்ற நடவடிக்கைகளால் இருநாட்டு உறவுகள் வலுவடைந்ததாக ஆனந்த்சர்மா தெரிவித்தார்.
Next Story

