நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : முதல்வர் தேர்தல் பிரசார பயணம் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 12 ம் தேதி, பிரசாரத்தை துவக்குகிறார். இதேபோல, திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்.
x
நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளில், வருகிற 21 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரம்
செய்கிறார். 

இதன்படி, வருகிற 12 , 16 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள், விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்கிறார்.

இதேபோல, நாங்குநேரி தொகுதியில் 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவு திரட்டுகிறார்.

இவ்விரு தொகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலா 3 நாட்கள், தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.  மற்றொரு பக்கம்  வருகிற 21 ம் தேதி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள்,  துவங்கியுள்ளன.

இவ்விரு தொகுதிகளிலும் ஜெயிக்கப்போவது யாரு ? என்பது, 24 ம் தேதி, வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும். 

இதனிடையே, நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்தும், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நா. புகழேந்தியை ஆதரித்தும், மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். முன்னதாக, இடைத்தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், வீதி, வீதியாக சென்று, வாக்கு சேகரிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்