தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
x
தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சைதாப்பேட்டை ரயில்நிலையத்தை பார்வையிட்டு, பயணிகளின் குறைகளை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யாமல், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை என தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்