ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.
x
கடந்த 2008-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறுவதில் சிக்கலை தீர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தனது கணவர் பீட்டருடன் சென்று  சந்தித்தாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். அவரிடம் விண்ணப்பதை அளித்த போது, சிக்கலை புரிந்து கொண்ட சிதம்பரம், அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிரதி உபகாரமாக, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின்  வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து டெல்லி ஹோட்டலில் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்ததாகவும், இந்த அனுமதிக்கு ஈடாக 10 லட்சம் அமெரிக்க டாலர் அளிக்க முடியுமா? என கார்த்தி சிதம்பரம் கேட்டதாகவும் இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  

அது சாத்தியமில்லை என பீட்டர் தெரிவித்தாகவும், தன்னுடைய நண்பர்களின் இரு நிறுவனங்களின் பெயரை கூறி அந்த நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு கார்த்தி சிதம்ரபரம் கூறியதாகவும் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர்களை ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன ஆலோசகர்களாக காட்டிக்கொள்ளலாம் என்று கார்த்தி சிதம்பரம் யோசனை கூறியதாகவும் இநதிராணி முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். 

பண விவகாரங்களை பீட்டர்தான் கவனித்தாகவும்,  அதனால் எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தமக்கு தெரியாது என்றும், இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனிடையே பீட்டர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கார்த்தி சிதம்பரம் கேட்ட 10 லட்சம் டாலரில் ஒரு பகுதியாக 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்களின் வாக்குமூலம் தான் ப.சிதம்பரத்திற்கு சிக்கலை உருவாக்கி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்