நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? - மனீஷ் திவாரி கேள்வி

370வது சட்டப்பிரிவை போல, நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? - மனீஷ் திவாரி கேள்வி
x
370வது சட்டப்பிரிவை போல, நாளை 371வது சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா? என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 370வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பது தொடர்பாக மாநிலங்களவையில், காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர்  மனீஷ் திவாரி, 370ஆவது சட்டப்பிரிவை போல, வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டமாக 371 உள்ளதாகவும், 370ஐ ரத்து செய்தது போல, நாளை 371 சட்டப்பிரிவையும் ரத்து செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இதன் மூலம் நீங்கள் எந்த மாதிரியான அரசியலமைப்பை முன்னெடுக்கிறீர்கள் என்றும், வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற நினைக்கிறீர்களா எனவும்  மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.  
 


Next Story

மேலும் செய்திகள்