தபால் துறை தேர்வு விவகாரம்:"தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்"- வாசன் கோரிக்கை

தபால் துறை தேர்வை தமிழ் மொழி உட்பட்ட மாநில மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தபால் துறை தேர்வு விவகாரம்:தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்- வாசன் கோரிக்கை
x
தபால் துறை தேர்வை தமிழ் மொழி உட்பட்ட மாநில மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் எழுத முடியும் என்ற அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வாசன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அஞ்சல் சேவையில் மாநில மொழிகளின் சேவை முக்கியம் என்றும், ஏற்கனவே தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்று காத்திருந்தவர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்