காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக 90 வயதான மூத்த தலைவர் மோதிலால் வொரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்
x
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக 90 வயதான மூத்த தலைவர் மோதிலால் வொரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். ராகுல் காந்தி குடும்பத்துடன் லண்டனுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மோதிலால் வொரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது குறித்து எவ்வித தகவலும் தமக்கு தெரிவிக்கவில்லை என்று மோதிலால் வொரா கூறியுள்ளார். இடைக்காலத் தலைவர் தலைமையில், காங்கிரஸ் செயற்குழு கூடி, புதிய தலைவர் தேர்ந்து எடுக்கும் பணி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்