"ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள்" - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள் - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை
x
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்மையாலும், காவிரியில் போதிய நீர் வராததாலும், நிலத்தடி நீர் 200 மீட்டருக்கும் கீழே சென்று விட்டதாலும் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாக, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க.  உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மேலும், வாழவழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் நடைபெறுவதால், நிலத்தடி நீர்மட்டம் மூவாயிரம் அடிக்கு கீழ் சென்று உள்ளதாகவும், இதனால் கடல்நீர் உள்ளே புகுந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவதோடு, மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அந்த பகுதியில் புதிய அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ள திட்டங்களை உடடினயாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

Next Story

மேலும் செய்திகள்