இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்

கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
அமைதியாக இருக்கும் நாட்டில் கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மஹேந்திராசிட்டி பகுதியில் சுற்றுசூழல் குறித்து தனியார் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன், அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் கருப்பணன், ஆளும் கட்சியினருக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்கட்சிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டினர். அவற்றெல்லாம் அதிமுக அரசு முறியடித்து மக்களுக்கு தேவையானவற்றை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்