"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி
x
மக்களவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் சென்ற பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 17-வது மக்களவை  தேர்தல்  சுதந்திரத்திற்கு பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த தேர்தலில் முதன்முறையாக அதிக பெண் எம்.பிக்கள் தேர்வாகி உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படும் என்று கூறினார். புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள் இந்த கூட்டத்தொடரில் இருந்து தொடங்கும் என்று கூறிய பிரதமர் மோடி அரசின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்