இன்று துவங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவியேற்கிறார்கள்

மோடி இரண்டாவது முறையாக பிரதமரான பின், முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..
இன்று துவங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவியேற்கிறார்கள்
x
புதிய எம்பிக்கள் இன்றும், நாளையும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க வரும் 19 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 5 ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்துவிட்டதால், அப்பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே அந்த பதவிக்கு மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கே.சுரேஷ், முன்னாள் மத்திய அமைச்சர், சசி தரூர் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

Next Story

மேலும் செய்திகள்