பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை

பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
x
பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். பாதுகாப்புக்கான குழுவில் 5 அமைச்சர்களும், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான குழுவில் 5 அமைச்சர்களும், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குழுவில் 10 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்கள் அனைத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிப்பார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழுவில்,உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெறுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தையும் பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு எடுக்க உள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அஜித் தோவல், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அமைச்சர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சர்கள் குழுவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இடம்பெறுள்ளனர். பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் தெலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சர்கள் குழு மேற்கொள்ள உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர்கள் குழுவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை, இந்த வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர்கள் குழு மேற்கொள்ள உள்ளது. முக்கிய துறைகளின் மேம்பாட்டுக்காக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்று குழுக்களிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்