காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

காங்கிரஸ் பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னை தேனாம்பேட்டையில் பேரணியில் ஈடுபட்டனர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்