மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
எண்ணிக்கை அளவில் குறைவாக இருந்தாலும், கூட்டணி அடிப்படையில் தமிழகத்தின் உரிமைக்காக அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்