வாக்கு எண்ணிக்கை - பின்பற்றப்படும் நடவடிக்கைகள்...

வருகிற 23 ஆம் தேதி, நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்படும், நடைமுறைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை - பின்பற்றப்படும் நடவடிக்கைகள்...
x
தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 23-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு துவங்கும் என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல், தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால், விவிபாட் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் அலுவலரால் ஒப்புகை சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால், சரிபார்ப்புக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகை சீட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்கு சாவடிகளை தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்