அரசியல் களத்தில் மாயமான கட்சிகள்
பதிவு : மே 15, 2019, 03:43 PM
தமிழகத்தின் பல்வேறு காலகட்டங்களில் புதிது புதிதாய் உருவான கட்சிகள், அரசியல் களத்தில் காணாமல் போயிருக்கின்றன.
தமிழகத்தில் பல மாநில கட்சிகளின் தாய் கட்சி அல்லது மூல கட்சி என்றால் ஒன்று நீதிக்கட்சி மற்றொன்று காங்கிரசாகும். அரசியல் களத்தில் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் பலர், தனிக்கட்சிகளை அதிரடியாக துவங்கி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினர். 

ஆனால், இந்த கட்சிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கி போயின. அவற்றுள், ராஜாஜியின் சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின், நமது கழகம், திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க., நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க., வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ், மற்றும் தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை, சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி உள்பட இன்னும் பல கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு, 

பின்னர் காணாமல் போயின. கடைசியாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என கட்சி தொடங்கிய அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அ.தி.மு.கவோடு தனது இயக்கத்தை இணைக்க காத்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி களத்தில் இருந்த 180 கட்சிகளில், தற்போது 141 கட்சிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

435 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

10 views

7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

4 views

ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.

27 views

"நாட்டு மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்" - பிரதமர் மோடி

கேதார்நாத்தில் தியானத்தை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2013 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவுக்கு பிறகு கேதர்நாத்துக்கும், தமக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

15 views

பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார்.

37 views

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.