பிரசாரத்தின் போது பதநீர், இளநீர் குடித்த ஸ்டாலின்...

2-வது கட்டமாக ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
x
தி.மு.க தலைவர் ஸ்டாலின், 2-வது கட்டமாக ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்ற அப்பகுதிமக்கள், பதநீர், இளநீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அவருக்கு வழங்கினர். வாக்குசேகரிப்பின் போது, குடிநீர், வடிகால், குளம் தூர்வாருவது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என ஸ்டானிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்