எனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்

மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் என கமல் தெரிவித்துள்ளார்.
எனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்
x
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சின்னியம்பாளையம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இல்லாத அரசு தற்போது உள்ளதாகவும் அது அகற்றப்பட வேண்டும் எனவும் கூறினார். மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் எனவும் அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்