நான் ஆசைப்பட்டிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் - டிடிவி தினகரன்

தாம் ஆசைப்பட்டிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
x
பாஜகவின் ஏஜெண்டாக பன்னீர்செல்வம் செயல்பட்டதால் தான் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார். ஒட்டபிடாரம் தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து பொட்டலூரணியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தாம் ஆசைப்பட்டிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என்றும், தமக்கு பதவி ஆசை இல்லாததால் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். துரோகிகளின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்