பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்

பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
x
பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார். சென்னையில், நடிகர் ரஜினியின் வளர்ப்புத் தந்தையான பாலம் கல்யாணசுந்தரத்தின் 80ஆம் வயது முத்துவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பங்கேற்றபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மறுவாக்குப் பதிவு குறித்து பதிலளித்த அவர், தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும், மக்களை வாக்குச் சாவடிக்கு கூட்டிவரும் சிரமம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தெரியும் என்றும் இல. கணேசன் கூறினார். மீண்டும் மறுவாக்குப்பதிவு போன்ற நிலை ஏற்படாமல், தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்