மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது - தமிழிசை

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைப்பதாக குறிப்பிட்ட அவர், மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். தூத்துக்குடியில் பாஜகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர்,  கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்