டெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு
x
டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தேசிய செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிக்கையில், சாந்தினி சவுக் தொகுதியில் ஜே.பி.அகர்வாலும், வடகிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஜித்தும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு டெல்லியில் அரவிந்தர் சிங் லவ்லியும், புதுடெல்லியில் அஜய்மக்கானும், தனித்தொகுதியான வடமேற்கு டெல்லியில் ராஜேஷ் லிலோதியா-வும் போட்டியிடுகின்றனர். அதேபோல் மேற்கு டெல்லியில் மகபால் மிஸ்ராவும் போட்டியிடுவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது. மேற்கு தொகுதிக்கு மட்டும்  வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்