மாயாவதி, யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு பிரசார பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
x
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு பிரசார பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்ட போது சாதி மதத்தை முன்வைத்து பிரசாரம் செய்ததாக, இருவர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இவ்வாறு பிரசாரம் மேற்கொண்டு ஆதயாம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என அறிவுறுத்தியிருந்தனர். 

இதனையடுத்து ஏப்ரல் 16-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரத்துக்கு யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல் 48 மணி நேரத்துக்கு முன்பாக மாயாவதியும் பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்