நீ்ட் தேர்வு எழுதித்தான் தமிழிசை மருத்துவர் ஆனாரா? - தமிமுன் அன்சாரி கேள்வி

பாஜக மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவரானாரா என தமிமுன் அன்சாரி கேள்வி
x
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி  பிரசாரம் செய்தார். பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசும்போது, பாஜக மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவரானாரா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலை நீடித்தால் அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு வந்து விடும் என்ற அவர், கஜா புயல் தாக்கியபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்