முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் - முதலமைச்சர் பழனிசாமி

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.
x
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உச்சநீதிமன்ற அனுமதியுடன் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நிகழ்ந்துள்ளது என்றார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்