பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் - தமிழச்சி தங்கபாண்டியன்

பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
பாலியல்  வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் என, தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்  தெரிவித்தார். திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் இருந்து சித்திரைக் குளம், பாரதிதாசன் தெரு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் அவர் வாக்குகளை சேகரித்தார்.  தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மற்றும் மீன பிரதிநிதிகளை  சந்தித்து அவர் ஆதரவு கோரினார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன், தென்சென்னையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாலியல்  வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்