"மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார்" - தம்பிதுரை

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது  பேசிய அவர் நான் கரூர் தொகுதியிலேயே குடியேறி விட்டேன், தற்போது 6வது முறையாக தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியை விட்டு விட்டு கேரளா மாநிலம் வயநாட்டில் நிற்கபோகிறார்.அவரால் அங்கு எப்படிவெற்றி பெற்று பிரதமர் ஆக முடியும் என கேள்வி எழுப்பினார். மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் மத்திய அரசிடம் தான் தமிழகத்திற்கு தேவையான நிதித் தொகை உள்ளது என்றும் அதை பெற்று தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்