"தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வராத கூட்டணி தி.மு.க. கூட்டணி" - பன்னீர்செல்வம்

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.
x
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். இரண்டு கூட்டணிகளில் எந்தக் கூட்டணி வெற்றி அடைய வேண்டும் என்பதை முடிவு செய்யும் எஜமானர்களாக மக்கள் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தையும், ஜீவாதார திட்டங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வந்து செயல்படுத்தவில்லை என்றும் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார்.  


Next Story

மேலும் செய்திகள்