பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...

ஆரத்தி எடுத்த பெண்களின் கால்களில் விழுந்து காங். வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு.
பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...
x
கரூர் கோடாங்கிபட்டியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக கோடாங்கிபட்டி பட்டாளத்து அம்மன், முத்தாலம்மன் கோவில்களில் பூஜை செய்தார். இதையடுத்து, நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் ஜோதிமணி விழுந்து வணங்கினார். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் அங்கிருந்த கைக்குழந்தைகளை வாங்கி கொஞ்சினார்.  திமுக மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, திமுக மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்