"ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது" - ஸ்டாலின்

பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு - ராதா ரவி விளக்கம்

இதனிடையே, நடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்